கட்டுப்பாட்டு மையத்தின் ரேடாரில் பிரச்சனை - விமான சேவைகள் பாதிப்பு

0 345

இங்கிலாந்தில் கொளுத்தும் வெயிலால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரேடார் பிரச்சனையால் லண்டனில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. லண்டன் ஹீத்ரோவில் கடந்த வியாழக்கிழமை இதுவரை இல்லாத அளவாக 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

பிரிட்டனில் ரயில் தண்டவாளங்கள் 27 டிகிரி செல்சியஸ் அல்லது 80 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலைக்கு ஏற்ப அமைக்கப்பட்டவை. இதற்கு மேல் வெப்பம் அதிகரித்தால் தண்டவாளங்கள் விரிவடைந்து விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. லண்டன் மற்றும் சுற்றுவட்டாரங்களில் வெயில் கொளுத்தும் நிலையில், தண்டவாளங்கள் 122 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பமடைந்து விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது.

இந்த பிரச்சனையால் ரயில் சேவைகள் பாதிப்புக்குள்ளான நிலையில், ரேடார் பிரச்சனையால் லண்டன் ஹீத்ரோ (Heathrow) மற்றும் கேட்விக் (Gatwick) விமான நிலையங்களில் விமான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது.

விமான போக்குவரத்துக்கு வழிகாட்டும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் ஸ்வான்விக்கில் அமைந்துள்ளது. அங்கு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், விமான சேவைகளை முழுமையாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பிரிட்டனில் மிகவும் பரபரப்பாக இயங்கும் முதல் இரண்டு விமான நிலையங்களான ஹீத்ரோ மற்றும் கேட்விக்கில், வழக்கத்தைவிட குறைந்த எண்ணிக்கையிலேயே விமானங்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். ரேடாரில் நேரிட்ட பிரச்சனையால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கேட்விக் விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என தேசிய விமானப் போக்குவரத்து சேவையான நேட்ஸ் (NATS) கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments