ஏரியை ரூ 6 லட்சம் செலவில் தூர் வாரிய கிராம மக்கள்

0 1150

தஞ்சை அருகே, பறவைகள் சரணாலயமாக திகழும், ஏரியை,10 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து, சொந்த பணத்தில் தூர்வாரியுள்ளனர்.

கள்ளப்பெரம்பூரில் சுமார் 632 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி, பறவைகள் சரணாலயமாக திகழ்வதுடன், 10 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, 2 ஆயிரத்து 262 ஏக்கர் நிலத்தின் பாசனத்துக்கும், மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

பருவமழை பொய்த்ததன் காரணமாக, ஏரியில் நீர் மட்டம் குறைந்தும், தூர்வாரப்படாமலும் உள்ளதையடுத்து, கிராம மக்களே தூர்வாரி, நீர்ஆதாரத்தை பெருக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

சொந்தமாக, சுமார் 6 லட்சம் ரூபாய் நிதி திரட்டி, தூர் வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதுடன், ஏரியில் நீர் நிரம்பி, பறவைகள் வருவதற்கான வாய்ப்பும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments