இன்டெல் ஸ்மார்ட்போன் மோடம் தொழிலை கையகப்படுத்தியது ஆப்பிள்

0 690

ஆப்பிள் நிறுவனம் இன்டெல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மோடம் தொழிலை 100 கோடி டாலருக்கு கையப்படுத்தியுள்ளது.

குவால்காம் நிறுவனத்துடனான நீண்ட வழக்கு சிக்கல்களுக்குப் பின் இன்டெல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மோடம் தொழிலை ஆப்பிள் நிறுவனம் கையகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டது. இரு நிறுவனங்களும் அதை ஏற்கவோ, மறுக்கவோ செய்யாத நிலையில், தற்போது 100 கோடி டாலர் மதிப்பில் இன்டெல்லின் ஸ்மார்ட் போன் மோடம் தொழிலை ஆப்பிள் நிறுவனம் கையகப்படுத்தியிருப்பதாக இரு நிறுவனங்களும் கூட்டாக அறிவித்துள்ளன.

இன்டெல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மோடம் தயாரிப்பில் உள்ள 2 ஆயிரத்து 200 பணியாளர்கள், அறிவுசார் சொத்து உள்ளிட்டவை இனி ஆப்பிள் நிறுவனத்தைச் சாரும்.

இந்த ஒப்பந்தத்தை அடுத்து ஆப்பிள், இன்டெல் ஆகிய இரு நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது. ஆப்பிளின் போட்டி நிறுவனங்களான சாம்சங், ஹ்வாவெயைப் போன்றே ஆப்பிளும் இனி சொந்த தயாரிப்பு மோடத்தையே ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும். அதே சமயம் கணிணிகளுக்கான மோடம் தயாரிக்கும் உரிமை இன்டெல் நிறுவனத்திடமே நீடிக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments