மெக்கா செல்லும் இங்கிலாந்து நாட்டவருக்கு எச்சரிக்கை

0 1227

இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவுக்குச் செல்லும் இங்கிலாந்து நாட்டவர்கள் ஒட்டகப் பாலை அருந்த வேண்டாம் என்று அந்நாடு கேட்டுக் கொண்டுள்ளது.

ஹஜ் பெருநாள் நடப்பாண்டு ஆகஸ்ட் 9 முதல் 14 வரை கொண்டாடப்படுகிறது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லீம்கள் புனித யாத்திரையாக மெக்கா, மதீனா உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் விலங்குகளின் கறந்த பாலில் இருந்து மெர்ஸ் எனப்படும் புதிய வைரஸ் பரவுவதாக வந்த தகவலையடுத்து சவுதி அரேபியா செல்லும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒட்டகப் பாலை அப்படியே அருந்துவரைத் தவிர்க்கவேண்டும் என இங்கிலாந்து கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2012 முதல் 2 ஆயிரத்து 500 பேர் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 845 பேர் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments