ரஷ்யாவில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால முகாமில் தீவிபத்து

0 195

ரஷ்யாவில் குழந்தைகள் தங்கியிருந்த கோடைக்கால முகாம், தீப்பற்றியதில் 4 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஹாபரோவ்ஸ்க்((Khabarovsk)) நகரில், விடுமுறையை ஒட்டி கோடைக்கால முகாம் நடத்தப்பட்டது. இதில் 7 முதல் 15 வயது உட்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இவர்களுக்கென 26 தற்காலிக கொட்டகைகளும் அமைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், செவ்வாய் கிழமை அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில், கூடாரங்கள் கருகியதோடு அதில் தங்கியிருந்த 3 சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் மீட்கப்பட்ட சிறுவர்கள் அங்குள்ள ஸ்கை ரிசார்ட்டில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த கோர தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments