6 கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக குமாரசாமி உருக்கம்

0 2604

கர்நாடக சட்டப்பேவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருப்பதை முன்னிட்டு பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் ஆளும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதற்கான தீர்மானம் கடந்த வியாழக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.

 

இன்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, 6 கோடி கர்நாடக மக்களிடமும் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக உருக்கமுடன் தெரிவித்தார். தான் முதலமைச்சராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். தனது பதவியை மகிழ்ச்சியுடன் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

ஆதாரமின்றி தன் மீது பாஜக ஊழல் குற்றச்சாட்டு சுமத்துகிறது என்று கூறிய குமாரசாமி, மக்களுக்காக தனது அரசு பாடுபட்டுள்ளது என்றார். பல நூறு கோடி ரூபாய் ஊழல் செய்து பின்வாசல் வழியாக பாஜக ஆட்சிக்கு வர முயற்சிப்பதாகவும், ஆட்சிக்கு வந்த நாள் முதலே குதிரை பேரம் துவங்கி விட்டதாகவும் அவர் சாடினார்.

 

இதனிடையே பெங்களூருவில் சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர் தங்கியுள்ள குடியிருப்பு முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னெச்சரிக்கையாக பெங்களூரு மாநகரம் முழுவதும் 48 மணி நேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments