கோவில் உண்டியலை பெயர்த்து தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

0 337

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோவில் உண்டியலை பெயர்த்து எடுத்து தூக்கிச் சென்ற கொள்ளையர்களை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

பழனி அடுத்த வேலம்பட்டியில் பிரசித்தி பெற்ற புற்றுக்கண் வீரமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 20ஆம் தேதி நள்ளிரவு சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற இருக் கொள்ளையர்கள் சிசிடிவி கேரமாக்கள் பொருத்தப்பட்டுள்ளதை கண்டு துணியால் முகத்தை மறைத்துக் கொண்டுள்ளனர். இதையடுத்து இரும்பு கம்பி உதவியுடன் கோவில் உண்டியலை பெயர்ந்து எடுத்த கொள்ளையர்கள் அதனை கையோடு தூக்கிச் சென்றுள்ளனர்.

இந்த சிசிடிவி காட்சியை கைப்பற்றியுள்ள கீரனூர் போலீசார், கொள்ளையர்களின் உருவத்தை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments