பாலாற்றில் தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் ஆந்திரா..!

0 683

ந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள, தடுப்பணையை 40 அடியாக உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளதை, தமிழக அரசு, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பாலாற்றில், ஆந்திர அரசு ஏற்கனவே 29 தடுப்பணைகள் கட்டி தமிழகத்துக்கு வரும் தண்ணீரை தடுத்துள்ளது. இந்நிலையில் இதில், 21 தடுப்பணைகளின் உயரத்தை அதிரிக்கும் பணிக்கு, ரூபாய் 43 கோடி நிதிஒதுக்கி, டெண்டர் விட்டுள்ளதாகவும், இடையில் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள், தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதில் கிடிமாணி பெண்டா அருகில் கங்குந்தி என்ற இடத்தில் கட்டப்பட்ட தடுப்பணையை, 22 அடி உயரத்திலிருந்து 40 அடியாக உயர்த்தும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

மேலும், பொகிலிரே என்ற இடத்தில் உள்ள தடுப்பணையின் உயரத்தையும், சுமார் 40 அடிக்கு உயர்த்த பணிகள் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தடுப்பணைகள் கட்டப்படுவதை எதிர்த்து, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இப் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் இனி பாலாற்றில், தமிழகத்திற்கு தண்ணீர் முற்றிலும் வர வாய்ப்பில்லாத நிலையை ஆந்திர அரசு ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுபாடு ஏற்படுவதுடன்,விவசாயம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments