பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த கொடூரன்

0 807

ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டான்.  

ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் அருகே உள்ள மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் தேவி. கர்நாடக மாநிலம் சீரங்கப்பட்டணத்தை சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமங்கலம் மூலக்கடை பகுதிக்கு வந்து வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் தேவி வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து  சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக  தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார்  கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள ஏரியூர் கிராமத்தை சேர்ந்த ராமகிருஸணன் என்பவனை பிடித்தனர்.

அவனிடம் விசாரித்ததில் தேவியுடன் முறையற்ற உறவு இருந்து வந்ததாகவும், தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை  திருப்பித் தராத ஆத்திரத்தில் தேவியை கழுத்தை நெறித்து கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டான்.

இதையடுத்து போலீசார் ராமகிருஸணனை சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments