கடத்தப்பட்ட சிறுமியை 8 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெற்றோர்

0 325

சென்னை அமைந்தகரையில் கடந்த வாரம் கடத்தப்பட்ட சிறுமியை 8 மணி நேரத்தில் மீட்ட விவகாரத்தில், காவல் ஆணையர் உட்பட அதிகாரிகளையும், தனிப்படை போலீசாரையும் மீட்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

கடந்த 18ஆம் தேதி அமைந்தகரையை சேர்ந்த அருள்ராஜ், நந்தினி தம்பதியினுடைய மகளான 4 வயது சிறுமியை கடத்தப்பட்ட 8 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக மீட்டனர். இதில் வீட்டு பணிப்பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் 17 பேருக்கும் தனித்தனியாக மலர் கொத்துகளை கொடுத்து கண்ணீர் மல்க சிறுமியின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இதுபோன்று நன்றி பாராட்டுவது பொதுமக்களுக்காக மேலும் பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக கூறினார். தொழில்நுட்ப உதவியுடன் தான் சிறுமியை மீட்க முடிந்தது என்று தெரிவித்த காவல் ஆணையர், தொழில்நுட்ப வசதிகள் காவல்துறையினருடைய வேகத்தை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் பாதுகாப்பான நகரம் சென்னை தான் என்பதற்கு இந்த வழக்கு ஓர் உதராணம் என்று பெருமிதத்துடன் தெரிவித்த காவல் ஆணையர், காவல் எல்லைகளை கடந்து காவல் துறையினர் அனைவரும் இந்த வழக்கில் ஒற்றுமையாக செயல்பட்டது தான் வெற்றிக்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments