நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதியளிக்க, எல்ஐசி கடன் வழங்குகிறது

0 382

நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதியளிக்க, 2024ஆம் ஆண்டுக்குள் 1.25 லட்சம் கோடி ரூபாய் கடனாக அளிக்க எல்ஐசி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும் புதிதாக சாலைகளை கட்டமைக்கவும் பாரத்மாலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொடக்கத்தில் 5.35 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்த இந்த பாரத்மாலா திட்டத்தின் தற்போதைய திருந்திய  மதிப்பீடு 8.41 லட்சம் கோடி ரூபாய் ஆகும். செஸ் வரி, சுங்கச்சாவடி வருவாய், நிதிச் சந்தைகளில் கடன்பெறுதல், தனியார் பங்களிப்பு, காப்பீடு மற்றும் ஓய்வு நிதியங்கள், கடன்பத்திரங்கள் மூலம் பாரத்மாலா திட்டத்திற்கு நிதியளிக்கப்பட இருப்பதாகவும், எல்ஐசியிடமிருந்து கடன்பெறுதல் அதில் ஒரு  வழிவகை என்றும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ஓராண்டில் 25 ஆயிரம் கோடி ரூபாயும், 5 ஆண்டுகளில் 1.25 லட்சம் கோடி ரூபாயும் எல்ஐசி கடனாக வழங்குவதாக நிதின் கட்கரி கூறியுள்ளார். இந்த நிதியை நெடுஞ்சாலை கட்டமைப்புக்கு பயன்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  பாரத்மாலா திட்டத்திற்கான மொத்த நிதி 30 ஆண்டுகளுக்கு திரட்டப்படும் என்றும், ஒவ்வொரு பத்தாண்டிற்கு ஒரு முறை வட்டி விகிதம் திருத்தியமைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments