ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் 167 சவரன் நகை கொள்ளை..!

0 735

கோவை மாவட்டம் துடியலூர் அருகே ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டின் பின்பக்க கதவின் தாழ்ப்பாளை உடைத்து 167 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

துடியலூரை அடுத்த வெள்ளக்கிணறு பிரிவு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். காந்திபுரத்தில் சுப நிகழ்வுகளுக்கான புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யும் ஸ்டூடியோ நடத்தி வரும் இவர், நேற்று பிற்பகல் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றிருந்தார்.

இரவில் வீடு திரும்பிய போது, படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 167 சவரன் நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின் பக்க கதவின் தாழ்ப்பாளை உடைத்து கொள்ளை நடந்திருப்பது போலீசார் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டின் பின்பக்கம் கதவு இருக்கும் பட்சத்தில், இரும்புக் கதவையும் அமைத்து, உள்பக்கமாக பூட்டு போடுவது பாதுகாப்பானது என்று போலீசார் அறிவுரை கூறியுள்ளனர். மேலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது அவசியம் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments