காதலுக்கு எதிர்ப்பு : ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

0 748

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே இராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த எல்லேஷ் என்ற இளைஞரும், அதே கிராமத்தில் வசிக்கும் உறவுக்கார பெண்ணான ஜோதியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

காதலை வீட்டில் சொன்ன போது அவர்களது பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. ஜோதிக்கு வேறு ஒருவரைத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கவே நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் இருவரும் காருக்கொண்டப்பள்ளி என்ற இடத்தில் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

அதிகாலையில் தகவல் அறிந்து அங்கு திரண்ட உறவினர்களும், கிராம மக்களும், காதல் ஜோடி உடல் சிதறி உயிரிழந்து கிடப்பதைக் கண்டு கதறி அழுதனர்.  சிதறி கிடந்த உடல் பாகங்களை மீட்ட ஓசூர் ரயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments