இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு? அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபைக்கு வருமாறு குமாரசாமி உருக்கமான வேண்டுகோள்

0 1254

ர்நாடக சட்டப்பேரவையில், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபைக்கு வருமாறு முதலமைச்சர் குமாரசாமி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக 18ந் தேதி சட்டசபைக் கூடியது. வாக்கெடுப்பை நடத்துமாறு ஆளுநர் வஜுபாய் வாலா 2 கடிதங்களை அனுப்பினார். மூன்று முறை அவர் கெடு விதித்தும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின.இந்நிலையில், சட்டமன்ற விவகாரங்களில் ஆளுநர் தலையிட முடியாது என்று வலியுறுத்தி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

பெங்களூரில் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய குமாரசாமி, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபைக்கு வரவேண்டுமென உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேவைப்பட்டால் முதலமைச்சர் பதவியை கூட்டணிக்கு விட்டுக் கொடுக்க தயார் என்றும் குமாரசாமி கூறியதாகவும் அதையும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நிராகரித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் குமாரசாமி காலம் கடத்துவதாகவும் இன்றே, சட்டமன்றத்தில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இதனால் குமாரசாமி அரசு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments