ரூ. 10க்கு சேலை, சட்டை என்ற துணிக்கடையின் அறிவிப்பு - துணிகளை வாங்க முண்டியடித்தால் தள்ளுமுள்ளு

0 1564

சிவகங்கையில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு துணிக்கடை ஒன்று 10 ரூபாய்க்கு சேலையும் 10 ரூபாய்க்கு சட்டையும் விற்கப்படும் என அறிவித்ததால் அங்கு கூட்டம் திரண்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அரண்மனைவாசல் முன்பு உள்ள பூம்புகார் என்ற துணிக்கடையில் முதலில் வரும் 100 நபர்களுக்கு என இந்த சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து கடை திறப்பதற்கு முன்பே நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அங்கு குவியத் தொடங்கினர். கடை திறந்ததும் அத்தனை பேரும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கடைக்கு வந்த கூட்டம் போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதால், போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments