மாரடைப்பால் காலமான டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்

0 776

மாரடைப்பால் காலமான டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

1998 முதல் 2013 வரை தொடர்ந்து 3 முறை டெல்லி முதலமைச்சராக பதவி வகித்த ஷீலா தீட்சித், டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் பதவி வகித்து வந்தவர். இவர் மாரடைப்பு காரணமாக டெல்லியிலுள்ள போர்ட்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை மாலை 3.55 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து டெல்லி நிஜாமுதின் பகுதியிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பிரதமர் மோடி, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, எல்.கே.அத்வானி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

அதற்கு பின்னர் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் மயானத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராபர்ட் வத்ரா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments