குழந்தைகள், முதியவர்களுக்கான ஸ்மார்ட் நேப்கின் சாதனம்

0 960

குழந்தைகள், முதியவர்களுக்கான ஸ்மார்ட் நேப்கின் சாதனத்தை லூமி ஸ்மார்ட் நேப்பி என்ற பெயரில் கூகுளின் துணை நிறுவனம் வடிவமைத்து அசத்தியுள்ளது.

குழந்தைகளின் நேப்கின்களை எப்போது மாற்ற வேண்டும் என கவனிப்பதிலேயே பெரும்பாலான பெற்றோரின் தூக்கம் களைகிறது. இதேபோல் சிறுநீர் கோளாறு உள்ள முதியவர்களுக்கும், அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களுக்கும் நேப்கின்களை உரிய நேரத்தில் மாற்ற வேண்டும் என்ற படபடப்பு அவர்களை கவனித்துக் கொள்பவர்களுக்கு இருக்கும். இதற்குத் தீர்வு காணும் பொருட்டு கூகுளின் துணை நிறுவனமான வெரிலி ஸ்மார்ட் சாதனத்தை வடிவமைத்துள்ளது.

image

அதை நேப்கினில் பொருத்தினால், எப்போது அதிக ஈரமானது?, எப்போது கனக்கிறது? குழந்தை உறங்கிய நேரம் எத்தனை? குழந்தைக்கு பால் புகட்டிய நேரம் எத்தனை? எப்போது நேப்கின்களை மாற்றிவிட வேண்டும் ? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற்றோர் அல்லது கண்காணிப்பாளரின் ஸ்மார்ட்போன்களுக்கு அறிவிக்கை அனுப்புகிறது. வை-ஃபை, சென்சாருடன் கூடிய இது மறு உபயோகத்துக்குரியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments