அமெரிக்க அதிபர் டிரம்ப் - பாக்.பிரதமர் இம்ரான் கான் நாளை சந்திப்பு

0 296

தீவிரவாதிகள் குறித்த அரசின் கொள்கையை மாற்றிக் கொண்டால் பாகிஸ்தானுக்காக அமெரிக்காவின் கதவுகள் திறந்திருக்கும் என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிரம்ப்பை நாளை வாஷிங்டனில் நேரில் சந்திக்க உள்ள பாகிஸ்தான் பிரதமரிடமும் இதனை அமெரிக்கா வலியுறுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அண்மையில் மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டதை கண்துடைப்பு நாடகம் என்று இந்தியா தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க அதிகாரிகளும் இதே கருத்தை பிரதிபலித்துள்ளனர்.

2001 முதல் ஹபீஸ் சையத் ஏழு முறை கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதை  அதிகாரி ஒருவர் சுட்டிக் காட்டினார். டிரம்ப்-இம்ரான் கான் சந்திப்பில் ஆப்கானிஸ்தான் அமைதி முயற்சிகள் முக்கியமான விவாதப்பொருளாக இருப்பினும்  தீவிரவாதம் குறித்த பாகிஸ்தானின் அணுகுமுறையை அந்நாடு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கடுமையான முறையில் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா-ஆப்கான் இடையிலான வர்த்தகத்திற்காக பாகிஸ்தான் தமது நாட்டு வழியாக வர்த்தக தடத்தை ஏற்படுத்த  அனுமதியளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா பாகிஸ்தானிடம் வலியுறுத்தி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments