பாகிஸ்தானில் நடக்கும் அநீதிகள் குறித்து இம்ரானிடம் டிரம்ப் பேச வலியுறுத்தல்

0 734

பாகிஸ்தான் பிரதமருடனான சந்திப்பின் போது அந்நாட்டின் சிந்து மாகாணத்தில் நடக்கும் அநீதிகள் குறித்து பேச வேண்டும் என அதிபர் டிரம்பிடம் அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வரும் திங்களன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் டிரம்பை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தீவிரவாதம் குறித்து மட்டுமின்றி, பாகிஸ்தான் மக்களுக்கு நடக்கும் அநீதிகளைக் களைவது குறித்தும் வலியுறுத்த வேண்டும் என 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

குறிப்பாக பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஒரே, ஊசியைப் பயன்படுத்தியதால் 2016 ஆண்டில் ஆயிரத்து 521 பேரும், இந்த ஆண்டு தொடக்கத்தில் 681 பேருக்கும் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டத.

சிறுபான்மையினரான இந்து, கிறிஸ்தவப் பெண்களைக் கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்து முதியவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பது போன்ற அரசு அதிகாரிகள் ஆதரவுடன் நடக்கும் சமூக அநீதிகள் குறித்து பேசுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக சேவகர்கள், எழுத்தாளர்களை கடத்திக் கொல்வது குறித்தும் பேசுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments