தேதி குறிப்பிடாமல் தமிழ்நாடு பேரவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்

0 464

தமிழ்நாடு சட்டப்பேரவையை, தேதி குறிப்பிடாமல், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 28 நாட்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜூன் 28-ந் தேதி தொடங்கியது. தமிழ்நாடு அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகளில் பங்கேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத் துறைகளின் அமைச்சர்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

சட்டசபை கூடிய 28 நாட்களில் 7 நாட்கள், மாலையிலும் அவை அலுவல்கள் நடைபெற்றன. அந்த வகையில் மொத்தம் 164 மணி நேரம் 39 நிமிடங்கள் அவை நடந்துள்ளது. இந்த கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கையில் 129 எம்.எல்.ஏ.க்கள் உரையாற்றினர். அவர்களில் 62 பேர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

ஆளும்கட்சியினர் 67 பேர், 21 மணி 25 நிமிடங்களும், எதிர்க்கட்சியினர் 33 மணி 49 நிமிடங்கள் பேசினர். எதிர்க்கட்சியினருக்கு கூடுதலாக 12 மணி 24 நிமிடங்கள் பேச நேரம் ஒதுக்கப்பட்டது.

49 நிகழ்வுகளில் முதலமைச்சர் விளக்கம் அளித்துப் பேசியிருக்கிறார். 6 சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், 124 கவன ஈர்ப்பு தீர்மானங்கள் அவைக்கு கொண்டு வரப்பட்டன. சட்டசபை 110-ம் விதியின் கீழ் 42 அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments