கல்வீச்சை எதிர்கொள்ள ரிசர்வ் படையின் மகளிர் காவலருக்கு சிறப்பு உடை

0 693

ஸ்ரீநகரில் அடிக்கடி நடைபெறும் கல்வீச்சை எதிர்கொள்ள சிஆர்பிஎப் பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு உடை வழங்கப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 300 பெண்கள் ஈடுபடுகிறார்கள்.
கல்வீச்சு மற்றும் தாக்குதல்களை தடுக்கும் போது பெண்கள் படையினர் காயம் அடைகிறார்கள்.

இதையடுத்து கல்வீச்சில் காயத்தில் இருந்து தப்பிக்க பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு வசதி கொண்ட உடையை ராணுவ பாதுகாப்பு உடலியல் மற்றும் அறிவியல் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ளது.

இதனை சி.ஆர்.பி.எப். இயக்குனர் ஆர்.ஆர். பத்பூகர் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்.இந்த உடையானது உடலில் விலா எலும்பு பகுதி, கைகளின் பின்புறம், தொடை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த உடை 6 கிலோ எடையில் இருக்கும்’ என்று பத்பூகர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments