தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பு

0 898

கடல் கொந்தளிப்புடன் சூறைக்காற்று வீசுவதால், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை ஒட்டியுள்ள கன்னியாகுமாரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், துரும்பனை, அழிக்கால் கடற்பகுதிகளில் சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

இதனையடுத்து 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதே போல நெல்லை மாவட்டத்தின் கூடங்குளத்தை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை. ராமேசுவரம் மீனவர்களும் கடல் கொந்தளிப்பு காரணமாக கடலுக்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்கினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments