ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை

0 862

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களுக்குச் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கடந்த 28ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. இதில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களின்போது, பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களுக்குச் சென்று, மரியாதை செலுத்தி வந்தனர்.

இன்றுடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவுற்ற நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களுக்குச் சென்று மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினர்.

மேலும், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர், ரோஜா உள்ளிட்ட மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களில், மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments