மும்பையில் "தமிழ்நாடு இல்லம்" அமைக்கப்படும்

0 463

மும்பையில் புதிய தமிழ்நாடு இல்லம் மற்றும் தமிழ்நாடு கலாச்சார மையம் அமைக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

பொதுத்துறை மற்றும் திட்ட வளர்ச்சித்துறை ஆகியவற்றின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் இறுதியில் பேசிய துணை முதலமைச்சர், சென்னை அரசு விருந்தினர் மாளிகையில் 10 லட்சம் செலவில் புதிய " உடற்பயிற்சி கூடம்" அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

முன்னாள் படைவீரர்களின், கைம்பெண்களின் ஒரு மகளுக்கு வழங்கப்பட்டு வரும் திருமண நிதியுதவி 20 ஆயிரம் ரூபாயிலிருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், மற்றும் இந்த நிதியுதவி, இரண்டாவது மகளுக்கும் நீட்டிப்பு செய்யப்படும் என்றும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். 

நீடித்த., நிலைத்த., வளர்ச்சி இலக்குகளை அடையும் வகையில், மாவட்ட வாரியாகவும், துறைகள் வாரியாகவும் சிறப்பு பிரிவு அமைக்கப்படும் என்றார். மாநிலத்தின் பின்தங்கிய வட்டாரங்கள், ஏனைய வட்டாரங்கள் மற்ற மாவட்டங்களின் வளர்ச்சி தரவரிசைப்படுத்தப்பட்டு, விருதுகள் வழங்கப்படும் என்றும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments