குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு, புதிய பேருந்துகளுக்கு நிதி ஒதுக்க அனுமதி

0 247

குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு, புதிய பேருந்துகள், விவசாயக் கடன்கள் தள்ளுபடி உள்ளிட்டவற்றுக்கு நிதி ஒதுக்க முதல் துணை மதிப்பீடுகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் முதல் துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2006 மார்ச் வரையான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய கூட்டுறவு வங்கிகளுக்கு 253 கோடியே 39 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எரிசக்தி துறைக்கு கூடுதலாக 1640 கோடி ரூபாய் நிதி ஒதுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மக்காச்சோளப் பயிர்கள் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 186 கோடியே 25 லட்சம் ரூபாய் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் நிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் துறைக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 226 கோடி ரூபாய் வழங்க கூடுதல் நிதிக்கு அனுமதியளிகப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மாநிலப் போக்குவரத்து கழகங்களுக்கு மூவாயிரம் புதிய பேருந்துகள் வாங்க 302 கோடி ரூபாயும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் தனது நிலுவைத் தொகையை செலுத்த 1000 ரூபாயும் ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு இறுதிப் பலன்களை வழங்க மாநில போக்குவரத்து கழகங்களுக்கு குறுகிய கால கடனாக 1093 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments