உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 56 ஆயிரம் குடியிருப்புகள்

0 324

உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 8 ஆயிரத்து 750 கோடி மதிப்பீட்டில் 56 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும் என, சட்டப்பேரவையில்,  முன்வைக்கப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிதியுதவியுடன், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் உறைவிட மேம்பாட்டுத்திட்டம் 3 ஆயிரத்து 981 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் முன்னெடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன், பேரிடர்களை எதிர்க்கொள்ளும் வகையிலான வீட்டு வசதி மற்றும் உறைவிட திட்டம் 4 ஆயிரத்து 756 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் செயல்படுத்த தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களின் கீழ் தற்போதுள்ள வீட்டு வசதி குடியிருப்புகளோடு சேர்த்து கூடுதலாக 56 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும். இந்த திட்டங்கள் சென்னை மற்றும் இதர நகரங்களில், குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments