50 ஆண்டுக்கு பிறகு கிடைத்த கடிதத்திற்கு பதில் எழுதிய சிறுவன்

0 1562

இந்திய பெருங்கடலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட பாட்டிலில் அடைக்கப்பட்ட கடிதம் ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ளது.

ஐரே (Eyre) தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில், பால் என்பவரும் அவரது 9 வயது மகன் ஜியா எலியாத்தும் (Jyah Elliott) மீன்பிடித்துக்கொண்டு இருந்த போது கடற்கரை மணல் பகுதியில் கிடந்த கண்ணாடி பாட்டில் ஒன்றில் கடிதம் ஒன்று அடைக்கப்பட்டு இருந்ததை கண்டுள்ளனர்.

image

பாட்டிலை உடைத்து கடிதத்தை பால் படித்த போது 1969ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி அப்போது 13 வயதே ஆன பால் கில்மோரே என்பவர் அந்த கடிதத்தை எழுதியது தெரியவந்தது. அதில், இங்கிலாந்தில் இருந்து மெல்போர்ன் நகரத்திற்கு தான் குடிபெயர உள்ளதாகவும், ஆஸ்திரேலியா செல்லும் கப்பலில் இருந்து இந்த கடிதத்தை எழுதுவதாகவும் கில்மோரே தெரிவித்துள்ளார்.

image

மேலும் தனது கடிதத்திற்கு பதில் அனுப்பும் படியும் அவர் எழுதி உள்ளார். இதனையடுத்து கில்மோரே எங்கு இருக்கிறார் என்பதை அறியாமல் சிறுவன் எலியாத் பதில் கடிதம் எழுதி அதனை பாட்டிலில் அடைத்து கடலில் வீசியுள்ளார்.

இந்நிலையில் 60 வயதை கடந்துள்ள கில்மோரே தற்போது பால்திக் கடல்பகுதியில்(Baltic) சொகுசு கப்பல் ஒன்றில் பயணித்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments