இளைஞர்களிடம் விருப்பமில்லை எனக் கூறிய பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்

0 992

இங்கிலாந்தில் தன்னை பின்தொடர்ந்து வந்த இளைஞர்களிடம் தனக்கு விருப்பமில்லை எனக் கூறிய பெண், கொடூரமாகத் தாக்கப்பட்டதன் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 13-ம் தேதி அதிகாலை மூன்றரை மணியளவில் மான்செஸ்டர் நகரின் ரிச்மாண்ட் தெருவில் இரவு கேளிக்கை விடுதியில் இருந்து வந்த பெண் தமது நண்பருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களைப் பின் தொடர்ந்து வந்த 3 இளைஞர்களில் ஒருவன் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. மன்னிக்கவும், தனக்கு விருப்பமில்லை என நாகரீகமாக சொல்லி விலக முயன்ற பெண்ணை அவன் கண்ணில் ஓங்கிக் குத்திவிட்டு அங்கிருந்து கூட்டாளிகளுடன் தப்பி ஓடினான்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் முதுலுதவி செய்து டேக்ஸி மூலம் அழைத்துச் சென்று அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். கண் முற்றிலும் வீங்கிப் போயிருக்க, இமை கிழிந்ததுடன், கண்ணுக்குள் ரத்தக்கட்டும் ஏற்பட்டு அந்தப் பெண் அவதிப்பட்டு வருகிறார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments