2023-க்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக்கப்படும் - ஓபிஎஸ்

0 459

2023-ஆம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ்.,  வீட்டு வசதி வாரியம் மூலம் 24,347 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறினார்.

குடிசை மாற்று வாரியம் மூலம் 1970 முதல் 2011 வரை 1 லட்சத்து 11 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டதாகவும் ஆனால், கடந்த 8 ஆண்டிகளில் 1 லட்சத்து 55 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மக்களுக்கு 300 சதுர அடியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 825 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், 1 லட்சத்து  47 ஆயிரத்து 608 வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

22 ஆயிரத்து 264 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் 48 ஆயிரத்து 938 வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments