அழகுநிலையத்தில் பணிபுரிந்து வந்த மனைவியை கொடூரமாக அடித்துக் கொலை செய்த கணவன்

0 511

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மனைவியை கொடூரமாக அடித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவானதாகக் கூறப்படும் கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பியைச் சேர்ந்தவர்கள் இளையராஜா - சாந்தி தம்பதியர். சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இளையராஜா 20 நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இருவரும் ஓசூர் அடுத்த சூளகிரியில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். அங்குள்ள அழகுநிலையம் ஒன்றில் சாந்தி பணிபுரிந்து வந்த நிலையில் காலை அவரது வீட்டில் ரத்த காயங்களுடன் இறந்துகிடந்துள்ளார்.

கொடூரமாகத் தாக்கப்பட்டு, ஜன்னல் கம்பியில் கயிற்றால் கழுத்து கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் போலீசாரால் மீட்கப்பட்டது. இளையராஜா தலைமறைவாகியுள்ளதால் அவரே கொலையை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், கொலைக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments