விண்கலன்களைப் போன்ற வீடுகளைக் கட்டமைத்த அமெரிக்க நிறுவனம்

0 542

அமெரிக்காவின் ஏர்பிஎன்பி என்ற நிறுவனமானது, விண்கலன்கள் வடிவில் உருவாக்கியுள்ள வீடுகள், கவனம் ஈர்த்துள்ளன. அப்போலோ 11 விண்கலத் திட்டத்தின் 50ஆவது நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை கெளரவிக்கும் வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Airbnb என்ற நிறுவனமானது வினோத திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் நிறுவனமான ஏர் பிஎன்பி, அப்போலோ 11, பறக்கும் தட்டுகள் போன்றவற்றின் வடிவில் 5 வீடுகளை வடிவமைத்துள்ளது.

கலிபோர்னியாவின் டிவெண்டி நைன் பால்ம்ஸ், ஸ்காட்லாந்து, நியுசிலாந்தின் புகாக்கி ஆகிய இடங்களில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில், அந்த வீடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

அங்கு ஒருநாள் இரவு தங்குவதற்கு இந்திய மதிப்பில் 750 ரூபாய் என்ற மிகக்குறைந்த கட்டணத்தை அந்த நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களின் வார இறுதி நாட்களில் தங்கிக் கொள்வதற்கான முன்பதிவு, நடைபெற்று வருகிறது-

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments