என்.ஐ.ஏ விசாரணை தீவிரம் காவலில் “அன்சாருல்லா” ஆதரவாளர்கள்..!

0 656

பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிருந்த அன்சாருல்லா அமைப்பை சேர்ந்த 16 பேரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் 8 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர். விசாரணை அடிப்படையில் தொடர்புடைய நபர்களை சுற்றி வளைக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

ஐ.எஸ். ஐ. எஸ், அல் கய்தா மற்றும் சிமி உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையது அன்சருல்லா பயங்கரவாத அமைப்பு. ஐக்கிய அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள இவ்வமைப்பை சேர்ந்த 14 பேர் துபாயில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கடந்தாண்டு அங்குள்ள காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

ஆறு மாத காலம் அந்நாட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட, டெல்லி விமான நிலையத்தில் வைத்து அவர்களை என் ஐ ஏ எனும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து நாகப்பட்டிணத்தில் இருவர் கைது செய்யப்பட்டு 16 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 16 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்த அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 8 நாட்கள் விசாரிக்க அனுமதி பெற்றுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் வைத்து ஒரே நேரத்தில் 16 பேரிடமும் விசாரணை நடப்பதால் அங்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே கைதான 16 பேரில் முக்கிய நபர்களான 5 பேர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இவர்கள் துபாயில் இருந்து கொண்டே பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டும் நடவடிக்கையிலும், இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஆள் சேர்க்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளதாக கூறும் என்.ஐ.ஏ அதிகாரிகள் இவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் யாரென விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT