கேரள கடல் பகுதியில் மாயமான 3 மீனவர்கள்

0 385

கேரள கடல் பகுதியில் படகு மூழ்கி தமிழக மீனவர்கள் 3 பேர் மாயமாகியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டாலின் தனது நாட்டுப்படகில் நிக்கோலஸ், சகாயம், ஜான் போஸ்கோ, ராஜு ஆகியோருடன் கடந்த 13ஆம் தேதி கேரள மாநிலம் நீண்டக்கரை மீன் பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்று உள்ளார்.

அவர்கள், வியாழன் அன்று கரை திரும்ப இருந்த நிலையில், கடல் சீற்றத்தினால் அவர்களின் படகு நீண்டக்கரை கடல் பகுதியில் கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து சகாயம், நிக்கோலஸ் ஆகியோர் கடலில் நீந்தி கரை சேர்ந்தனர். அலையில் சிக்கி மாயமான மற்ற 3 மீனவர்களை கேரள கடலோர காவல் படையினரும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களும் தேடி வரும் நிலையில் அவர்களின் படகு கடல் அரிப்பு தடுப்பு சுவரில் மோதி கரை ஒதுங்கியுள்ளது.

மழை மற்றும் சூறை காற்று காரணமாக 2 நாட்களாக கேரள கடல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments