எம்பிபிஎஸ் எக்சிட் தேர்வை ஏற்க மாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 453

எம்.பி.பி.எஸ்., படித்தபின்பு, எக்சிட் தேர்வு நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும், நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை எதிர்த்து, அதிமுக வாக்களிக்கும் என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவப்படிப்பில் சேர, நீட் நுழைவுத்தேர்வு நடத்துவது போல், 6 ஆண்டுகள் எம்பிபிஎஸ் படிப்பு முடிந்ததும், அவர்களுக்கு, எக்சிட் எனப்படும் தேசியஅளவில், தகுதி தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு, அதற்கான மசோதா பாராளுமன்றத்தில் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், இது தொடர்பாக, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசும் போது, எக்சிட் தேர்வு, மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதால், அதனை அதிமுக எதிர்க்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இந்த மசோதா, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி இருப்பதாகவும், தமிழகத்தின் உரிமையை பறிக்கும் செயல் என்பதால், இதனை ஏற்க முடியாது எனவும் கூறினார்.

மேலும் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்கு வேண்டுமானால் எக்சிட் தேர்வு நடத்தலாம் எனவும், பாராளுமன்றத்தில், அதிமுக எம்பிக்கள் இந்த மசோதாவுக்கு எதிராக குரல் கொடுப்பதுடன், எதிர்த்தும் வாக்களிப்பார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments