இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்த ஷிவ்லேக் சிங் பலி

0 2628

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில், இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த குழந்தை நட்சத்திரம் ஷிவ்லேக் சிங் ((Shivlekh Singh)) பலியானார்.

ராய்ப்பூரிலிருந்து பிலாஸ்பூர் நோக்கி தனது பெற்றோருடன் ஷிவ்லேக் சிங் சென்ற கார், லாரி ஒன்றின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஷிவ்லேக் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், அவரது தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஷிவ்லேக் சிங்கின் தந்தை மற்றும் மேலும் ஒருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த தகவல்களை வெளியிட்ட சத்தீஸ்கர் மாநில போலீசார், தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சங்கத்மோச்சான் ஹனுமான் ((Sankatmochan Hanuman)) உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர், 14 வயதான ஷிவ்லேக் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments