ஆளில்லா குட்டி விமானத்தைப் பறக்க விட்டு காவிரி கரையோரம் ஆய்வு

0 542

நாமக்கல் மாவட்டத்தில், காவிரி கரையோரம், ஆளில்லா சிறிய விமானத்தை பறக்க விட்டு, அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

வெள்ள காலத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தடுப்பணைகள் கட்ட உகந்த இடங்கள் தேர்வு, கால்வாய்கள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைக் குழுவானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இதற்காக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டில் பணிகள் தொடங்கின. பல மாவட்டங்களில் ஆளில்லா குட்டி விமானங்களைப் பறக்க விட்டு புகைப்படங்களை எடுத்துள்ள அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, தற்போது நாமக்கல் மாவட்டம் எஸ்.கொந்தளம், மோகனூர், செல்லிப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து வருகிறது.

அந்தக் குட்டி விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம், புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
ஒருவாரத்திற்கு அங்கு ஆய்வில் ஈடுபடும் அவர்கள், இதுதொடர்பாக அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைக்க உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments