மாலை நேரம் மின்சார கம்பிகளில் அமர்ந்து மக்களுக்கு காட்சிக் கொடுக்கும் சிட்டுக்குருவிகள்..!

0 427

சீனாவில், மாலை நேரத்தில் நகர் ஒன்றுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகள் மின்சார கம்பிகளில் அமர்ந்து மக்களுக்கு காட்சிக்கொடுத்து வருகின்றன.

ஜியாங்சி மாகாணத்துக்கு உட்பட்ட தைஹி (Taihe) நகருக்கு மாலை நேரம் வருகை தரும் ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகள் குறிப்பிட்ட இடைவேளையில் அங்குள்ள 5 மின்கம்பிகளில் அமர்ந்து கொள்கின்றன.

பின் மறுநாள் அதிகாலை வரை அந்த மின்கம்பிகளில் இருக்கும் இந்த சிட்டுக்குருவிகள், தங்களுக்கு தானே செல்லமாக சண்டையிட்டபடி கீழே மனிதர்களின் நடமாட்டத்தையும் பார்த்து செல்கின்றன.

இதனை வியந்தபடி கண்காணித்து வரும் நகர மக்கள், சிட்டுக்குருவிகள் கடந்த இரு மாதங்களாக இதேபோல் மாலை நேரம் வந்து செல்வதாகவும், அவைகள் மின்கம்பியில் அமர்ந்திருக்கும் விதம் பார்க்க அழகாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments