இலங்கை யாழ் நகரில் இருந்து நான்கு இந்திய நகரங்களுக்கு விரைவில் விமானசேவை

0 912

இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இந்திய நகரங்களுக்கு விமான சேவையை விரைவில் தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு, கொச்சி, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க உள்ளதாக இலங்கை விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜூனா ரத்னதுங்கா அறிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தை அடுத்த பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் பணிகளை கடந்த வாரம் அவர் தொடங்கி வைத்தார்.

இப்பணிக்காக இலங்கைக்கு இந்தியா 300 மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த விமான நிலையம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்படும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி விமானங்கள் இல்லாததால், அங்கிருப்போர், 6 மணி நேரம் சாலையில் பயணித்து கொழும்பு வழியாக வரவேண்டிய நிலை உள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்குத் தொடர்பு இல்லாத விமான சேவையால் ஒருபயனும் இல்லை என்று இலங்கைத் தமிழர் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments