ஆடி தொடக்கம் - தள்ளுபடியும் சேர்ந்து தொடங்கியது

0 441

ஆடி மாத தொடக்க நாளான இன்று, தள்ளுபடி விலையில் பட்டுப் புடவைகளை வாங்க சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது.

காரைக்குடியைச் சேர்ந்த பிரபல துணிக் கடை ஒன்று, ஆடி மாத தொடக்க நாளில் தள்ளுபடி விலையில் பட்டுப் புடவைகளை விற்பது வழக்கம். அதே போல் ஆடி மாத தொடக்க நாளான இன்று, தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அந்த துணிக் கடை நிறுவனமானது, தள்ளுபடி விலையில் பட்டுப் புடவைகளை விற்பனைக்காக குவித்து வைத்தது.

15 முதல் 70 சதவீதம் தள்ளுபடி என்பதால், புடவைகளை வாங்குவதற்காக காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, சிவகங்கை ஆகிய ஊர்களைச் சேர்ந்த பெண்கள் திருமண மண்டபம் முன் குவிந்தனர்.

காலை 6 மணி அளவில் பட்டுப் புடவை விற்பனை தொடங்கியதும் பெண்கள் கூட்டம் முண்டியடித்தது. தேடி தேடி புடவைகளை அள்ளிய அவர்கள், விலைக்கு ஏற்றவாறு பிடித்தவற்றை தரம்பிரித்து வாங்கிச் செல்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments