மதுபோதையில் அத்துமீறிய, பெண்ணும், ஆண் நண்பரும் கைது

0 1037

டெல்லியில், போக்குவரத்து காவலரிடம், அநாகரீகமாக நடந்து கொண்ட, ஒரு பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மாயாபூரி பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும், நன்றாக குடித்துவிட்டு, ஹெல்மெட் அணியாமல், இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது, அவர்களை, பணியில் இருந்து போக்குவரத்து காவலர் மறித்துள்ளார்.

வாகனத்தில் இருந்து இறங்கிய பெண், போக்குவரத்து காவலரை, தகாத வார்த்தைகளை கூறி, தாக்க முயன்றுள்ளார். வண்டியில் அமர்ந்திருந்த நபரும், ஏக வசனத்தில், போக்குவரத்து காவலரை வசைபாடியுள்ளார்.

இதுகுறித்து, போக்குவரத்து காவலர் அளித்த புகாரில், குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த அனில் பாண்டே என்பவரையும், அவருடன் வந்து, அநாகரீகமாக நடந்து கொண்ட மாதூரி என்று பெண்ணையும், காவல்துறையினர் கைது செய்தனர்.

போதையில், அந்த பெண்ணும், அவருடன் வந்தவரும், போக்குவரத்து காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments