விஸ்தாரா விமானிகளின் அலட்சியம்.. நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

0 709

வெறும் 10 நிமிடம் மட்டுமே பறப்பதற்கான எரிபொருளை வைத்துக் கொண்டு, 153 பேருடன், விஸ்தாரா நிறுவனத்தின் விமானம், லக்னோவில் தரையிறங்கிய சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

விஸ்தாரா நிறுவனத்தின், ஏர்பஸ் A-320 நியோ என்ற பயணிகள் விமானம், நேற்று முன்தினம், மும்பையிலிருந்து, டெல்லிக்குச் சென்றது. தலைநகரை விமானம் நெருங்கி கொண்டிருந்த வேளையில், மோசமான வானிலை நிலவுவதால், லக்னோ அல்லது, பிராயக்ராஜில் தரையிறங்குமாறு விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த தகவலை சற்றும் எதிர்பார்க்காத விமானிகள், அதிர்ந்து போனதாக கூறப்படுகிறது. அப்போது தான், விமானத்தில், எரிபொருள் குறைவாக இருப்பதை விமானிகள் கூறி, "மேடே கால்" எனப்படும் அபாய நிலையில் விமானம் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளனர். உடனடியாக, சுதாரித்த, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், லக்னோவில், விமானம் பத்திரமாக தரையிறங்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

அந்த சமயத்தில், அதிர்ஷ்டவசமாக, வானிலை நன்றாக இருந்ததால், விஸ்தாரா நிறுவனத்தின் விமானம், 153 பேருடன் பத்திரமாக லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது, விமானத்தில், அடுத்த 10 நிமிடங்கள் பறப்பதற்கான எரிபொருள் மட்டுமே இருந்தது.

விமானம் தரையிறங்க சற்று தாமதம் ஆகியிருந்தாலும், பெரியளவில் விபரீதம் நிகழ்ந்திருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். வழக்கமாக, புறப்பாடு மற்றும் சென்றுசேரும் இடங்களுக்கான தூரத்திற்கான எரிபொருளோடு, கூடுதலாக, ஒரு மணி நேரம் பறப்பதற்கான எரிபொருளை விமானத்தில் வைத்திருக்க வேண்டும். ஆனால், அந்த விதியை விஸ்தாரா விமான நிறுவனம் மீறியிருப்பதாக, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments