நாட்டின் பல்வேறு நகரங்களில் சந்திரகிரகணம் தெளிவாகத் தெரிந்தது

0 1041

149 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பூர்ணிமா அன்று நிகழ்ந்த பகுதி  சந்திர கிரகணத்தை, சென்னையில் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். 

விண்வெளியில் பூமியின் நிழலானது 13 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு கூம்பு வடிவில் பரவிக் கிடக்கிறது. கரு நிழல் பகுதி என்று அழைக்கப்படும் அப்பகுதியை பவுர்ணமி நாளன்று சந்திரன் கடந்து செல்லும் போது, சந்திர கிரகணம் நிகழ்கிறது. பூமியின் நிழலில் குறிப்பிட்ட அளவு மட்டுமே சந்திரனை மறைப்பதால் பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த பகுதி சந்திர கிரகணமானது நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நிகழ்ந்தது.

வெறும் கண்களால் இதைப் பார்க்க முடியும் என்று அறிவியலாளர்கள் கூறி இருந்ததால், இதைக் காண பொதுமக்கள் ஆர்வம் காட்டினார். இந்தியாவில் நள்ளிரவு 12.13 மணிக்கு தெரியத் தொடங்கிய பகுதி சந்திர கிரகணமானது, ஒன்றரை மணிக்கு முழுமை அடைந்து, அதிகாலை 4.30 மணிக்கு நிறைவு பெற்றது. மேகமூட்டம் காரணமாக சென்னையில் இது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் கோட்டூபுரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் தொலைநோக்கிகள் மூலம் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதேபோல் உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, டெல்லி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம், ஆகிய நகரங்களில் பகுதி சந்திர கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்க்க முடிந்தது.  சில நகரங்களில் சந்திர கிரகணம் சிவப்பு நிறத்தில் காட்சி அளித்தது.

149 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பூர்ணிமா அன்று நிகழ்ந்த இந்த சந்திர கிரகணம் அதிசய நிகழ்வாக மாறியது. அதேவேளையில் அப்போலோ 11 விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்ட 50ஆவது ஆண்டு தினத்தில் சந்திர கிரகணம் நிகழ்ந்ததும் முக்கியத்துவம் பெற்றது.

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் கண்டுகளித்தனர். அடுத்ததாக 2020 ஜனவரி 10ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழும். 2021 ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments