ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை

0 454

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இறுதி சடங்கிற்கு பணம் கொடுத்து விட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்னகாளிபாளையத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவருக்கு செல்வி, சாந்தி என்ற 2 மகள்களும், கோபாலகிருஷ்ணன் என்ற மகனும் இருந்தனர்.

இதில் 37 வயதான கோபால கிருஷ்ணனுக்கு திருமணம் ஆகவில்லை. சாந்தி திருமணாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். செல்வி திருமணமாகி கணவரை பிரிந்து ரகுநாதன் என்ற மகனுடன் தந்தை துரைராஜுடன் வசித்து வந்தார். கடந்தாண்டு செல்வியின் மகன் ரகுநாதன் காதல் விவகாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் குடும்ப சூழல் காரணமாக அனைவரும் மிகுந்த வேதனையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இடுவாய் கிராமத்தில் உள்ள தங்கை சாந்தி வீட்டிற்கு சென்ற சகோதரர் கோபால கிருஷ்ணன், உனக்கு இது தேவைப்படும் எனக்கூறி, வீட்டு பத்திரம் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கொடுத்துள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடன் சகோதரி செல்வி மற்றும் தந்தை துரைராஜும் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். திடீரென மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments