திமுகவையும், கருணாநிதியையும் விமர்சித்து செந்தில்பாலாஜி பேசிய கருத்தை சுட்டிகாட்டியதால் கடும் அமளி

0 1986

திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி அதிமுகவில் இருந்தபோது திமுகவையும், கருணாநிதியையும் விமர்சித்து பேசிய கருத்துக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டி பேசியதால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் போக்குவரத்துதுறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறையில் கடன் என்பது திமுக, அதிமுக என இரண்டு ஆட்சி காலத்திலும் இருந்ததாக குறிப்பிட்டார்.

மேலும் தற்போது திமுகவில் உள்ள செந்தில்பாலாஜி, அதிமுகவில் இருக்கும் போது தமிழ்நாட்டை பிச்சைப்பாத்திரமாக மாற்றியவர் கருணாநிதி, அட்சயப்பாத்திரமாக மாற்றியவர் ஜெயலலிதா என குறிப்பிட்டு பேசியதாக சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், பாத பூஜை செய்து திமுகவில் பதவி பெற்ற செந்தில்பாலாஜி உதிர்த்த முத்துகளையே அமைச்சர் விஜயபாஸ்கர் இங்கு பதிவு செய்ததாக கூறினார்.

அமைச்சர்களின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளிக்கு மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவில் இருந்தபோது திமுகவை விமர்சித்த செந்தில்பாலாஜிதான் தற்போது திமுகவிற்கு வந்திருக்கிறார் அதனால் திமுகவினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தான் பேரவையில் செந்தில்பாலாஜி பேசியதை அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என விளக்கம் அளித்தார்.

இதையடுத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து திமுக கொறடா சக்கரபாணி பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அதிமுக, திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். செந்தில்பாலாஜி பேசிய கருத்து குறித்து பேரவையில் கடும் அமளி நடைபெற்ற நேரத்தில் பேரவையில் செந்தில்பாலாஜி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments