ரூ.668.69 கோடியில் 1903 புதிய பேருந்துகள் வாங்க திட்டம்

0 957

நடப்பு நிதியாண்டில், தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகங்களுக்கு 1903 புதிய பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ளதாக, சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட போக்குவரத்துதுறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தேவைக்கு ஏற்ப வழிதடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கிடும் வகையில், 1903 புதிய பேருந்துகள் வாங்க, 668 கோடியே 69 லட்ச ரூபாய் நிதியை வழங்க, தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் மற்றும் மாநகர் போக்குவரத்து கழகம் இரண்டிலும் பயணம் செய்ய கூடிய வகையில் பொதுவான ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் குறித்த தகவல்களை பயணிகள் பெறும் வகையில் இணையதளம் மற்றும் செயலியை வடிவமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு இலவச பயணம் என்ற கொள்கை அடிப்படையில் தினந்தோரும் சராசரியாக 43 ஆயிரத்து 674  மூத்த குடிமக்கள் பயணம் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2018-19ம் ஆண்டில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களில் இயக்கிய சிறப்பு பேருந்துகளினால் 210.77கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக போக்குவரத்து துறை கொள்கைவிளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments