ஆந்திராவைச் சேர்ந்தவரை கடத்திய 8 பேர் கும்பல்

0 147

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி கடத்தப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்தவர், சங்கரன்கோவில் அருகே பொதுமக்களால் மீட்கப்பட்டார்.

8 பேர் கடத்தல் கும்பலில், 6 பேர் தப்பிவிட, 2 பேர் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமன்ஜோல்ரெட்டி பெங்களூருவில், தனியார் கன்சல்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே அறிமுகமான, செல்வக்குமார் என்பவர், சென்னையில் வசிக்கிறார். இந்த செல்வக்குமார், ஒரு கிலோ தங்கத்தை, 24 லட்ச ரூபாய்க்கு வாங்கித் தருவதாக அவரிடம் கூறியுள்ளார்.

இதை நம்பி கடந்த சனிக்கிழமை செவர்லெட் குரூஸ் ((Chevrolet Cruze)) காரில் சென்னை வந்த ராமன்ஜோல் ரெட்டியை, 5 பேருடன் சேர்ந்து செல்வகுமார் கடத்தியுள்ளார்.. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இவர்கள் சென்றபோது, 6 பேர் கும்பலுடன், மோட்டார் சைக்களில் வந்த 2 பேர் சேர்ந்துள்ளனர். அந்த 8 பேர் கும்பல், ராமன்ஜோல்ரெட்டியிடம், 30 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதோடு, 72 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

சேர்ந்தமரம் பஜாரில், தேநீர் அருந்த காரை நிறுத்தியபோது காரிலிருந்து குதித்து தப்பிய ராமன்ஜோல்ரெட்டி, காய்கறி கடை ஒன்றில் புகுந்து அபயகுரல் எழுப்பியுள்ளார். அவரை மீட்ட பொதுமக்கள், 8 பேர் கடத்தல் கும்பலில், ஆட்கொண்டார்குளத்தை சேர்ந்த வசந்தகுமார், செந்தட்டி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமாரை பிடித்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு, தென்காசி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். கடத்தப்பட்டு மீட்கப்பட்ட ராமன்ஜோல்ரெட்டி அளித்த புகாரின் பேரில், காரோடு தலைமறைவான 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments