நகைக்கடை ஊழியரின் கவனத்தை திசைத்திருப்பி கைவரிசை

0 2951

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நகைக்கடை ஊழியரின் கவனத்தை திசைத்திருப்பி ஐந்து சவரன் நகையை திருடிச் சென்ற இரு கொள்ளையர்களை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை சின்னையா தெருவில் ஆர்.கே.பி என்ற பெயரில் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த பத்தாம் தேதி சென்ற இரண்டு பேர், செயின் டாலர்களை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அதன் படி கடை ஊழியரும் டாலர்களை எடுத்துக் காண்பித்துள்ளார். அப்போது ஊழியரின் கவனத்தை திசைத் திருப்பிய கொள்ளையர்கள், ஐந்து சவரன் கொண்ட நான்கு டாலர்களை நைசாக திருடிச் சென்றுள்ளனர்.

சிசிடிவி காட்சியை கைப்பற்றியுள்ள போலீசார், கொள்ளையர்களின் உருவத்தை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments