பேரவை விதி எண் 110-ன் கீழ், முதலமைச்சர் அறிவிப்புகள்

0 866

பழங்கள், காய்கறிகள் மற்றும் விரைவில் அழுகும் ஏனைய பொருட்களுக்கான "விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம் மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தரமான இடுபொருட்களை சேமித்து விவசாயிகளுக்கு விநியோகிக்க,  நடப்பாண்டிலும், 100 விதை சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய மையங்களை கட்டுவதற்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரவை விதி எண் 110-ன் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை, வேளாண்மைத் துறை, இந்து சமய அறநிலையத் துறை சார்ந்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள் தற்போது பெற்று வரும் அகவிலைப் படியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி மானியம் 4 விழுக்காட்டிலிருந்து 6 விழுக்காடாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிட்டார். வறட்சி மிகுந்த மானாவாரி மற்றும் கடற்கரை பகுதிகளில் பனை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு, முதற்கட்டமாக நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் செலவில் 2.5 கோடி பனை விதைகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். நடப்பாண்டில், 100 விதை சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய மையங்களை கட்டுவதற்கு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, மிக நீள இழைப்பருத்தி ரக விதைகள், உயிர் உரங்கள், பருத்தி அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இடுபொருட்களை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் 

சென்னை வண்ணாரப்பேட்டையில், வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான 5.5 ஏக்கந் நிலத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நகரப்புற மக்களைக் கவரும் வகையில் "தோட்டக்கலை பாரம்பரிய பூங்கா" அமைக்கப்படும்.  நடப்பாண்டில், 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், கூடுதலாக 4 கரும்பு சாகுபடி இயந்திரங்களுக்கான 10 வாடகை மையங்கள் அமைக்கப்படும். மானாவாரி விவசாயிகளின் நலனுக்காக, நடப்பாண்டில் மேலும் 150 மதிப்புக்கூட்டு  மையங்களை உருவாக்குவதற்கு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 243 கிராம அளவிலான பண்ணை இயந்திர வாடகை மையங்கள் 19 கோடியே 44 லட்சம்  ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

நடப்பாண்டில், 12 கோடி ரூபாய் செலவில், 20 உழவர் உற்பத்தியாளர்  நிறுவனங்களில் விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடன் வசதி பெற்று தொழில் துவங்க, மூலதன உதவி, கடன் உத்தரவாதத் திட்டம், வட்டி உதவித் திட்டம் போன்ற திட்டங்கள் நபார்டு வங்கியின் "நாப்கிசான்" நிதி நிறுவன உதவியுடன் செயல்படுத்த நடப்பாண்டில், 266 கோடி ரூபாய் வரை கடன் உதவி அளிக்கப்படும். மதுரை, சேலம், ஈரோடு, தூத்துக்குடி, காஞ்சிபுரம் மாவட்டங்களில், பண்ணை அளவில் விளைபொருட்களை பாதுகாக்க சூரிய சக்தியால் இயங்கும் சிறிய அளவிலான குளிர்பதன அலகுகளை நிறுவிட தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், 100 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தி கொடுக்கப்படும். 

 இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இல்லாத கோவில்களில் திருப்பணிகளுக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT