தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் அஞ்சல் துறை தேர்வுகள் - மத்திய அரசு உறுதி

0 1184

தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இனி மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தபால் துறையில் ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தேர்வு நடைபெற்றதால் தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அஞ்சல் துறை தேர்வுகளை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தின.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. மாநிலங்களவையில் அதிமுக, திமுக எம்பிக்கள் அஞ்சல் துறை தேர்வுகளை தமிழ்மொழியில் நடத்த கோரி காலை முதல் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

தமிழக எம்பிக்களின் அமளியால் மாநிலங்களவையை  4 முறை ஒத்திவைக்க நேரிட்டது. மீண்டும் பிற்பகலில் அவை கூடிய போது பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தாமதமாக விளக்கம் அளிப்பதற்கு மன்னிப்பு கோரினார். தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார். ஜூலை 14 ஆம் தேதி ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடைபெற்ற அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments