108க்கு இனி கிரீன் சிக்னல்..! புதிய தொழில் நுட்பம்

0 3084

சென்னையில் இனி 108 ஆம்புலன்ஸ் செல்லும் சாலைகளில் 100 மீட்டருக்கு முன்பே சிக்னல்களில் பச்சை வண்ண விளக்கு தானாக ஒளிரும் தொழில் நுட்பம் செயல்பாட்டிற்கு வர உள்ளது

சென்னை பெரு நகர மாநகராட்சியில் ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் 90 அரசு மருத்துவமனைகள் உள்பட 4000 மருத்துவமனைகள் உள்ளன..! விபத்து உள்ளிட்ட அவசரகால சிகிச்சைக்காக எப்போது அழைத்தாலும், அங்கு விரைந்து செல்வதற்கும், அவசர உதவிக்கும் 108 ஆம்புலன்சு தயாராக உள்ளது.

தமிழகத்தில் 2300 அவசரகால உதவியாளர்களையும், 2400 ஓட்டுனர்களையும் கொண்ட 938 ஆம்புலன்சுகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் சென்னையில் மட்டும் 45 ஆம்புலன்சுகள் இயக்கப்படுகின்றன. இந்த 108 ஆம்புலன்சுகள் கடுமையான போக்குவரத்து நெருக்கடியிலும் நோயாளிகளின் உயிரை தக்க நேரத்தில் காப்பாற்றி வருகின்றது.

108 ஆம்புலன்சை பார்த்தவுடன் பல வாகன ஓட்டிகள் வழி விட்டாலும் சில சிக்னல்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆம்புலன்சுகள் விரைவாக செல்ல இயலாத நிலை நீடித்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்டர் பார் டெவலப்மெண்ட் ஆப் அட்வான்ஸ் கம்யூட்டிங் என்ற கேரள நிறுவனம் மூலம் புதிய தொழ்ல் நுட்பம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி சாலையில் 108 ஆம்புலன்ஸ் வந்தால் அதில் பொறுத்தப்பட்டிருக்கும் கருவியில் இருந்து கிடைக்கும் சமிக்ஞையை உணர்ந்து சிக்னலில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி சிக்னல் தானாக பச்சை நிற விளக்கை எரியசெய்து ஆம்புலன்ஸ் எளிதாக கடந்து செல்ல வழி விடும்..!

அதாவது சிக்னலில் முன்வரிசையில் நிற்கின்ற மற்ற வாகன ஓட்டிகள் விலகினால் ஆம்புலன்ஸ் விரைவாக குறிப்பிட்ட மருத்துவமனைக்கு செல்ல வழி கிடைக்கும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த 108 கிரீன் சிக்னல் தொழில் நுட்பத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளனர்.

சென்னை போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து சுகாதாரத்துறையினர் முதன் முதலில் சென்னை நகரத்தில் உள்ள சாலைகளில் இந்த 108 கிரீன் சிக்னல் சிஸ்டத்தை செயல்படுத்த உள்ளனர். குறிப்பாக தாம்பரத்தில் இருந்து ஆலந்தூர் வரையிலான சாலையில் உள்ள சிக்னல்களில் முதற்கட்டமாக இந்த கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து சென்னை முழுமைக்கும், தமிழகம் முழுமைக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments